திருவையாறில் லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்தி்ற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்ே்பாது அங்்கு நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் திருவையாறு செவ்வாய்க்கிழமை படித்துறை தெருவை சேர்ந்த கணேசன் மகன் கார்த்திக் (வயது35) என்பதும், ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றதும் தெரியவந்தது. இதுகுறித்து திருவையாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலாயுதம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து அவரிடம் இருந்த 12 லாட்டரி சீட்டுகள், ரூ.250 ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.