கஞ்சா, குட்கா விற்ற 2 பேர் கைது

கஞ்சா, குட்கா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-10-03 19:30 GMT

கிருஷ்ணகிரி:

ஓசூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பங்கஜம் மற்றும் போலீசார் தேன்கனிக்கோட்டை ராமச்சந்திரன் ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகமளிக்கும் வகையில் நின்றவரை சோதனை செய்தபோது அவர் 100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த சந்திரப்பா (வயது 54) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் மத்திகிரி போலீசார் பூனப்பள்ளி சோதனைச்சாவடி அருகே ரோந்து சென்றனர். அங்கு குட்கா பொருட்கள் விற்ற கலுகொண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த தேவராஜ் (49) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்