லாட்டரி, குட்கா விற்ற 4 பேர் கைது
லாட்டரி, குட்கா விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அதன்படி தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்கள் விற்ற தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவை சேர்ந்த ஷானுல்லா (வயது 39), ஊத்தங்கரையை சேர்ந்த கார்த்திகேயன் (40) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.400 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஓசூர் அட்கோ போலீசார் பாரதியார் நகர், காந்தி நகர் பஸ் நிறுத்த பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற ஓசூர் பஸ்தி பாரதியார் நகரை சேர்ந்த சிக்கண்ணா (56), பேரண்டப்பள்ளி காந்தி நகரை சேர்ந்த சந்திரபால் (23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.250 புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.