பேரிகை அருகேவிவசாயி கொலையில் கத்தி கொடுத்து உதவிய வாலிபர் கைது
விவசாயி கொலையில் கத்தி கொடுத்து உதவிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே பன்னப்பள்ளி கிராமத்தை சேர்ந்த திம்மராயப்பா மகன் திம்மராஜ் (27). விவசாயி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமலேஷ் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்தது. இதையொட்டி கடந்த 28-ந் தேதி ஏற்பட்ட தகராறில் திம்மராஜை, திருமலேஷ், அவருடைய நண்பர் கிஷோர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து கத்தியால் வெட்டி தலை துண்டித்து கொலை செய்துவிட்டு பாகலூர் போலீசில் சரண் அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று திம்மராஜ் தனது பாதுகாப்பிற்காக கத்தி ஒன்றை மறைத்து வைத்து கொண்டு சென்றார். அந்த 2 அடி நீள கத்தியை அத்திமுகத்தை சேர்ந்த முரளி என்பவர் திம்மராஜிக்கு கொடுத்தாகவும், முரளி முதுகுறுக்கியில் வெல்டிங் பட்டறை நடத்தி வருவதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கத்தி கொடுத்து உதவிய முரளியை போலீசார் கைது செய்தனர்.