பாலக்கோடு:
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பாலக்கோடு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கோடு போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள பெட்டிக்கடையில் நாராயணன் (வயது 32) குட்கா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 500 ரூபாய் மதிப்புள்ள குட்காவை பறிமுதல் செய்தனர்.