கிருஷ்ணகிரியில்கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

Update: 2023-09-20 19:45 GMT

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி டவுன் போலீசார், கே.தியேட்டர் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அவர்கள் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் கிருஷ்ணகிரி லண்டன்பேட்டை தினேஷ்குமார் (வயது23), பாரதி நகர் ராகவன் (20) ஆகியோர் என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்து இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, மோட்டார்சைக்கிள், 2 செல்போன்களை பறிமுதல் செய்யப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்