காவேரிப்பட்டணத்தில்காரில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது

Update: 2023-09-15 19:45 GMT

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் போலீசார் அங்குள்ள திருமண மண்டபம் அருகில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி அவர்கள் சோதனை செய்தனர். இதில் காரில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். அவர் சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த முகமது ஆசிக் (வயது28) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் கஞ்சா மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்