மகேந்திரமங்கலம் அருகே14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
மகேந்திரமங்கலம் அருகே 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
மாரண்டஅள்ளி
மகேந்திரமங்கலம் அருகே உள்ள குழிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் (வயது 27). இவரும், சிக்கதோரண பெட்டம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த ஜூன் மாதம் 1-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறி பிக்கனஅள்ளியில் உள்ள பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர். சிறுமிக்கு அடிக்கடி வாந்தி, மயக்கம், உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் சிறுமியை தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதித்தபோது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் போக்சோ வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.