கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிய ரவுடி கைது4 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

Update: 2023-09-03 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் ஆர்.பூசாரிப்பட்டி டாஸ்மாக் கடை அருகே ரோந்து சென்றனர். அங்கு 5 பேர் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். இதில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.

விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி அருகே ஜிஞ்சுப்பள்ளியை சேர்ந்த பிரபல ரவுடியான அகர் நிவாஸ் (29) என்பது தெரியவந்தது. இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து வீடுகளில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதையடுத்து அகர் நிவாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது குருபரப்பள்ளி, கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையங்களில் தலா ஒரு கொலை வழக்கு உள்பட மொத்தம் 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்