மொரப்பூர்:
கடத்தூர் அருகே உள்ள திண்டலானூரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர்கள் ராஜா மனைவி முத்து, ராஜா, முத்தரசு, கோவிந்தசாமி, மாசிதுரை, இளவரசி. இவர்களுக்கு நிலம் தொடர்பாக தகராறு தகராறு ஏற்பட்டது. அப்போது முத்து தரப்பினர் கந்தசாமி உள்ளிட்ட 3 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பான புகாரின் பேரில் கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து, இளவரசி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.