மாரண்டஅள்ளி:
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பகுதியில் அனுமதியின்றி வெடிமருந்து தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம், சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம, மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது மாரண்டஅள்ளி அருகே சீங்காடு பகுதியில் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அதே பகுதியை சேர்ந்த பழனி (வயது50) என்பதும், நாட்டு வெடிகளை தயாரிப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து அவரது வீட்டை சோதனை செய்தபோது நாட்டு வெடி தயாரிக்க மருந்து, பட்டாசு திரி ஆகியவை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பழனியை போலீசார் கைது செய்தனர். வெடிப்ெபாருட்களை பறிமுதல் செய்தனர்.