மூதாட்டியிடம் தகராறில் ஈடுபட்டவர் கைது

Update: 2023-08-22 19:30 GMT

குருபரப்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமந்தமலையை சேர்ந்த சின்னராஜ் மனைவி சீதா (வயது 78), அதே பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (37). இவர்களுக்கு இடையே நீண்ட நாட்களாக பாதை தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதற்கிடையே சீதா, தன்னுடைய நிலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் சுத்தம் செய்துள்ளார். அங்கு வந்த வேணுகோபால், சீதாவிடம் தகராறு செய்து பொக்லைன் எந்திரத்துக்கு தீ வைத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேணுகோபாலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்