ஓசூர் அருகேவனவிலங்குகளை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கியுடன் திரிந்தவர் கைது
மத்திகிரி:
ஓசூர் அருகே உள்ள எடப்பள்ளி பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது கையில் நாட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை வனத்துறையினர் பிடித்து விசாரித்தனர். அதில் அந்த நபர் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள மலையாண்டபுரத்தை சேர்ந்த மணிவேல் (வயது 30) என்பதும், அவர் கிரஷர் நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை செய்ததும் தெரியவந்தது.மேலும் அவர் வனவிலங்களை வேட்டையாட நாட்டுத்துப்பாக்கி வைத்து இருந்ததும், நாட்டுத்துப்பாக்கியை அவரே தயாரித்ததும் தெரியவந்தது. இதையடுத்து மணிவேலை வனத்துறையினர் மத்திகிரி போலீசில் ஒப்படைத்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து மணிவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.