மொரப்பூர்:
மொரப்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வான்மதி தலைமையில் போலீசார் சந்தப்பட்டி, செட்ரப்பட்டி, மூக்கனூர்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தப்பட்டி மாரியம்மன் கோவில் அருகில் பணம் வைத்து சூதாடியவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் சந்தப்பட்டியை சேர்ந்த சரவணன் (வயது 30), பழனி (47), ராமு (50), பெத்தூர் வெங்கடேசன்(42) ஆகியோர் என தொியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.