ஓசூர்:
சூளகிரி அருகே உள்ள கொல்லப்பள்ளியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 34). தனியார் நிறுவன ஊழியர். இவர் நேற்று முன்தினம் பெங்களூரு- ஓசூர் சாலையில் ஓசூர் தர்கா அருகே காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த ஒருவர், செந்தில் ஓட்டி சென்ற காரில் மோதினார். இதில் செந்திலின் கார் சேதமடைந்தது.
இதுகுறித்து கேட்ட செந்திலை காரில் வந்த 2 பேர் சேர்ந்து தாக்கினர். இதையடுத்து செந்தில் ஓசூர் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் செந்திலை தாக்கியது ஓசூர் குமுதேப்பள்ளியை சேர்ந்த சந்தோஷ்குமார் (25), பிரியதர்ஷன் (24) என்பது தெரியவந்தது. இதில் சந்தோஷ்குமார் பெங்களூருவில் உள்ளஐ.டி. நிறுவனத்திலும், பிரியதர்ஷின் வன்னியபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.