ஏரியூர்:
ஏரியூர் பகுதியை சேர்ந்த 32 வயது பெண்ணின் கணவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதற்கிடையே அதே கிராமத்தில் பெண்ணின் கணவருடைய அண்ணன் கடந்த 3 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது தம்பி மனைவியிடம் ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது. நேற்று வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கணவரின் அண்ணன் தகாத முறையில் நடக்க முயன்றதோடு மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து அப்பெண் பெரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் ேபாலீசார் தம்பி மனைவியிடம் தவறாக நடக்க முயன்றவரை கைது செய்தனர்.