ஓசூர்:
ஓசூர் சிப்காட் அருகே ஜூஜூவாடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட 156 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது. கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த வாகனத்தில் வந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலை பகுதியை சேர்ந்த இம்ரான் (வயது 22) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புகையிலை பொருட்கள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.