ஏரியூர் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

Update: 2023-07-03 19:30 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே உள்ள சிடுவம்பட்டி, பேகியம் புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 30) இவர் தன்னுடைய விவசாய நிலத்தில் கஞ்சா செடி பயிரிட்டு வருவதாக ஏரியூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது, தகவலை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஏரியூர் போலீசார், சரவணனின் விவசாய நிலத்தில் சோதனை செய்தனர் அப்போது 15 க்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் அவரது மிளகாய் தோட்டத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சரவணன் கைது செய்யப்பட்டார். அவர் பயிரிட்டிருந்த ஒன்றரை கிலோ எடையுடைய கஞ்சா செடிகளை போலீசார் பறிமுதல்செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்