இரவு நேர பஸ்கள் இயக்க ஏற்பாடு

சிவகாசியில் இருந்து மதுரைக்கு இரவு நேர பஸ்கள் இயக்கப்படுகிறது.

Update: 2022-10-22 19:32 GMT

சிவகாசி, 

சிவகாசியில் இருந்து மதுரைக்கு இரவு நேர பஸ்கள் இயக்கப்படுகிறது.

கூடுதல் பஸ்கள்

தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர்களில் உள்ள சிவகாசியை சேர்ந்தவர்கள் ஊருக்கு திரும்ப வசதியாக பல்வேறு இடங்களில் இருந்தும் சிவகாசி நகருக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் சிவகாசியில் உள்ள தொழிலாளர்களும் வெளியூர்களுக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரவு 12 மணிக்கு பின்னர் வழக்கமாக மதுரைக்கு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை.

தற்போது பண்டிகை காலம் என்பதால் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

சிறப்பு ஏற்பாடு

இதுகுறித்து போக்குவரத்து கழக சிவகாசி கிளை மேலாளர் நாகராஜ் கூறியதாவது:- ஞாயிறு, திங்கள், செவ்வாய் 3 நாட்களுக்கும் இரவு 11 மணிக்கு பின்னர் 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் மதுரைக்கு இயக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பயணிகள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனுக்குடன் பஸ்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்