வேலூர் மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற ஏற்பாடு

வேலூர் மாவட்டத்தில் வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-05-23 18:25 GMT

இந்திய ரிசர்வ் வங்கி ரூ.2,000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. நேற்று முதல் செப்டம்பர் மாதம் வரை தேசிய மயமாக்கப்பட்ட, தனியார் வங்கிகளில் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 188 வங்கி கிளைகளில் பொதுமக்கள் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை நேற்று முதல் மாற்றினர்.

இந்த நோட்டுகளை மாற்றுவதற்கு எவ்வித படிவமும், ஆவணங்களும் கொடுக்க தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகளில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கு அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் இல்லை. ஒரு சில வங்கிகளில் மட்டுமே வழக்கத்தை விட சிறிது கூட்டம் காணப்பட்டது. பெரும்பாலான வங்கிகளில் இதற்கென்று தனியாக கவுண்ட்டர் எதுவும் ஏற்பாடு செய்யப்படவில்லை. வங்கியில் ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றுவதற்கு பொதுமக்கள் அதிகளவு வந்தால் டோக்கன் முறை பின்பற்றப்படும்.

முதல் நாளான நேற்று குறைந்தளவு மக்களே வந்து ரூ.2 ஆயிரம் நோட்டுகளை மாற்றி சென்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது என்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்