தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க திருப்பூர் ஒன்றிய தலைவர் ஆதிலட்சுமி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் சகுந்தலா கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு அரசு காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே கொடுக்க வேண்டும், சத்துணவு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சத்துணவு ஊழியர்களை அலைக்கழிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.