அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-04-26 16:05 GMT


காங்கயத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பாக தாசில்தார் அலுவலக வளாகம், சார் பதிவாளர் அலுவலக வளாகம், நகராட்சி அலுவலக வளாகம், வேளாண்மை துறை அலுவலக வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை பொருளாளர் ஆர்.முத்துசாமி தலைமை தாங்கினார். இதில் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தின் காங்கயம் வட்ட கிளை தலைவர் ரவி உள்பட சங்கத்தின் மாவட்ட, வட்ட கிளை நிர்வாகிகள், அரசு ஊழியர்கள் கொண்டனர்.

இதே போல் தாராபுரம், குண்டடம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்