தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் மர்மஆசாமிகளால் நேற்று படுகொலை செய்யப்பட்டார்.இதை கண்டித்தும் விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் உடுமலை தாலுகா அலுவலகத்தில் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க உடுமலை கிளைத் தலைவர் சீனிபாண்டி தலைமை தாங்கினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்கிடுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உயிர் நீத்த கிராம நிர்வாக அலுவலருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.