தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசின் மின்கட்டணம், சொத்துவரி மற்றும் பால் விலை உயர்வை கண்டித்து பழைய நகராட்சி அலுவலகம் முன்பு அ.தி.மு.க.வினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாராபுரம் நகர செயலாளர் (பொறுப்பு) சி.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். தொழிற்சங்க தலைவர் அரசகுமாரன் வரவேற்றார். மாவட்டத்தலைவர் பி.கே.ராஜ், பொருளாளர் சின்னப்பன் என்கிற பழனிச்சாமி, மாவட்ட ஆவின் துணைத்தலைவர் டி.எஸ்.சிவக்குமார், மாவட்ட மகளிர் அணி இணை செயலாளர் கவுரிசித்ரா முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளரும், மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினருமான சி.மகேந்திரன் கண்டன உரையாற்றினார். அப்போது தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு கடந்த 10 ஆண்டு காலமாக சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்து வந்தது. ஆனால் தி.மு.க. அரசு பதவியேற்ற 18 மாதங்களாகியும் இன்னும் தேர்தலில் கூறிய பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சட்ட ஒமுங்கு சீர்கேடு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை தான் செய்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி குடும்ப பெண்ணுக்கு மாதம் ரூ.1,000, நீட் தேர்வு ரத்து, மதுவிலக்கு அமல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினார்்.
ஆர்ப்பாட்டத்தின் போது மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சத்தியபாமா, அம்மா பேரவை செயலாளர் கே.என்.ராமசாமி, மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி பங்கு மகேஷ்குமார், நகர பொருளாளர் சாமுவேல், நகராட்சி கவுன்சிலர் எஸ்.டி.நாகராஜன் முன்னால் நகர செயலாளர் மலை மாரிமுத்து, வழக்கறிஞர் ஆனந்தன், மாவட்ட இளைஞரணி கே.சி.மணி, தேர்பட்டி ஆதித்யன், நகர இளைஞர் பாசறை கே.ஆர்.சதீஷ், வார்டு செயலாளர்கள் தினேஷ்குமார், கணேசன் கார்த்திக், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.