பா. ஜனதாவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2022-10-27 15:49 GMT


தமிழ் மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிக்கும் தி.மு.க. அரசை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பாக தாராபுரம் அண்ணா சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளர்கள் வடுகநாதன், ஜெகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட துணை தலைவர்கள் ராஜா என்கிற கோவிந்தசாமி, செல்வாபழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் மைக்ரோ சுரேஷ், கே.எஸ்.ராஜா, மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் டெய்சி தங்கையா, சிறுபான்மையினர் அணி பாஷா உள்ளிட்டோர் கண்டன எழுச்சி உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் கொங்கு ரமேஷ், சுகுமார், மாநில இளைஞரணி செயலாளர் டாக்டர் யோகிஸ்வரன், மாவட்ட மகளிரணி தலைவர் டாக்டர் கார்த்திகா, மாவட்ட மகளிர் பொது செயலாளர் மகேஷ்வரி, தாராபுரம் மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்மோகன், கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், நகராட்சி கவுன்சிலர் மீனாட்சி கோவிந்தசாமி, மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் மற்றும் தாராபுரம், காங்கேயம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் செல்வ பிரபு ஆர்ப்பாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் செய்திகள்