உடுமலை தாலுகா அலுவலகம் முன் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-02-21 17:07 GMT


தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் உடுமலை தாலுகா அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை, மடத்துக்குளம் பகுதி மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டப் பொருளாளர் மாலினி தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் ராஜேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.ஆர்ப்பாட்டத்தின் போது, 100 நாள் வேலைத் திட்டத்துக்கான நிதி 30சதவீதம் குறைக்கப்பட்டதை கண்டித்ததுடன், மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேரம் மட்டுமே வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தினர். மேலும் ஆர்.டி.ஓ. தலைமையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை குறைதீர் கூட்டம் நடத்த வேண்டும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான புதிய உரிமைச்சட்டம் 2016-ஐ முறையாக அமலாக்க வேண்டும். போலீஸ் நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் மீதான புகார் மனுக்களின் மீது மாற்றுத்திறனாளிகள் சட்டப்படியே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

மேலும் செய்திகள்