போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர்

ஆற்றூரில் போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2023-05-20 18:45 GMT

திருவட்டார், 

ஆற்றூரில் போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

போதையில் ரகளை

திருவட்டார் அருகே உள்ள ஆற்றூரில் நேற்று மாலையில் மது போதையில் வாலிபர் ஒருவர் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவர் திடீரென அங்கு சாலையோரம் நிறுத்தி இருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி அதை இயக்க முயன்றார். இதை பார்த்த உரிமையாளர் சத்தம் போட்டார். உடனே, மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கினார். பின்னர், அந்த வந்த வாகனத்தை நிறுத்தி டிரைவரிடம் தகராறு செய்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியை தாக்க முயன்றார்.

இவரது ரகளையை பொறுக்க முடியாத சிலர் திருவட்டார் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் அந்த வாலிபர் மீண்டும் ரகளை ஈடுபடவே சிலர் அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து அருகில் உள்ள கடையின் முன்பு இருந்த இரும்பு கம்பியில் கட்டி வைத்தனர்.

ராணுவ வீரர்

சிறிது நேரத்தில் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கருணாகரன், ஜெயந்தகுமார் ஒரு வாகனத்தில் வந்தனர். அவர்கள் போதை ஆசாமி மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

பின்னர் அவரது பாக்கெட்டை சோதனையிட்ட போது ஆதார் அட்டை, ராணுவ அட்டை போன்றவை இருந்தன. விசாரணையில் அவர் மாத்தார் கொசவன்பிலாவிளையை சேர்ந்த ராணுவ வீரர் என்பதும், விடுமுறையில் ஊருக்கு வந்துள்ள அவர் போதை தலைக்கேறியதால் ரகளையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Tags:    

மேலும் செய்திகள்