ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கி 1½ பவுன் சங்கிலி பறிப்பு
ஆயுதப்படை போலீஸ்காரரை தாக்கி 1½ பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.
திருச்சி:
திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் வினித்ராம்(வயது 31). இவர் திருச்சி மாநகர ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இரவு மல்லாற்று பாலம் பகுதியில் இவர் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி இருந்தார். அப்போது, அங்கு வந்த 50 வயதுடைய ஒருவர் இருசக்கர வாகனம் அருகே சிறுநீர் கழித்துக்கொண்டிருந்தார்.
இதுகுறித்து வினித்ராம் அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு வினித்ராமை தாக்கியுள்ளனர். அப்போது அவர் அணிந்திருந்த 1½ பவுன் சங்கிலியை அவர்களில் யாரோ ஒருவர் பறித்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சிவக்குமார், வினோத், சூர்யா மற்றும் சிலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.