பெண்ணை காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது

கமுதி அருகே பெண்ணை காதலித்துவிட்டு திருமணத்துக்கு மறுத்த ஆயுதப்படை போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-03-26 18:45 GMT

கமுதி, 

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்து வலையபூக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா(வயது 29) இவர் கமுதி ஆயுதப்படை பிரிவில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இவரும் அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான ஒரு இளம்பெண்ணும் கடந்த ஓராண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண்ணுடன் இளையராஜா நெருங்கி பழகினார். இந்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் வற்புறுத்தி உள்ளார். அதற்கு அவர் மறுப்பு ெதரிவித்து கொலை மிரட்டல் விடுத்ததாக அந்தப் பெண் கமுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். கமுதி துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமலா மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து, இளையராஜாவை கைது செய்தனர். பின்னர் அவரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை பணியிடை நீக்கம் செய்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்