ஆயுதப்படை உபகரணங்களை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
ஆயுதப்படை உபகரணங்களை போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படையில் திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் ஆயுதப்படை போலீசாருக்கு வழங்கப்பட்ட உபகரணங்களை ஆய்வு செய்து, போலீசார் பயன்படுத்தி வரும் வாகனங்களை தணிக்கை செய்து, போலீஸ் நிலையங்களில் செயல்பட்டு வரும் ரோந்து மோட்டார் சைக்கிள்களை ஆய்வு செய்தார். பின்னர் அவர், போலீசாரின் குறைகள் குறித்து கேட்டறிந்ததோடு, பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்வுகளில் சிறப்பாக செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் உள்ளிட்ட 8 போலீசாரின் பணியினை பாராட்டி, அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முன்னதாக அவர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணி (பெரம்பலூர்), பெரோஸ்கான் அப்துல்லா (அரியலூர்), பெரம்பலூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசுவரன் (தனிப்பிரிவு), அசோகன் (ஆயுதப்படை) மற்றும் போலீசார் உடனிருந்தனர்.