திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி
நெமிலி திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடந்தது.
நெமிலி பேரூராட்சிக்குட்பட்ட பனப்பாக்கம் செல்லும் சாலையில் உள்ள திரவுபதிம்மன் கோவிலில் அக்னி வசந்த விழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12-வது நாளான நேற்று அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் கட்டைக்கூத்து கலைஞர் அர்ஜுனன் வேடமிட்டு 18 படிகளை உடைய 100 அடி உயரம் கொண்ட பனை மரத்தின் மீது ஏறி அங்கு வைக்கப்பட்டிருந்த பழங்களை எடுத்து பக்தர்களை நோக்கி வீசினார். அவற்றை பிடிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விழாவில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.