அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக பற்றி எரிந்த தீ

அரியமங்கலம் குப்பை கிடங்கில் 2-வது நாளாக தீ பற்றி எரிந்தது.

Update: 2023-07-19 19:21 GMT

திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான 47.7 ஏக்கர் பரப்பளவில் குப்பை கிடங்கு ஒன்று உள்ளது. இந்த குப்பை கிடங்கில் மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளிலும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்படும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றி எரிந்தது. தகவல் அறிந்த மாநகராட்சி பணியாளா்களும், தீயணைப்பு வீரர்களும் இரவு வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை மீண்டும் குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் தீ பற்றி எரிந்தது. இதனால் அதிக புகை மூட்டமும் எழும்பியது. உடனடியாக சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நேற்று இரவு வரை போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஓரளவுக்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் இன்னும் குப்பைக் கிடங்கில் இருந்து புகை வெளியேறிக் கொண்டிருப்பதால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்களும், மாநகராட்சி பணியாளர்களும் குப்பை கிடங்கை ஈரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்