அரியலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம்

அரியலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-07-15 18:50 GMT

அரியலூர் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் செந்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். துணை தலைவர் சரஸ்வதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அருளப்பன், முத்துக்குமார், மேலாளர் ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது பகுதி மக்களின் பிரச்சினைகளை எடுத்துக்கூறினர். அதனைத்தொடர்ந்து அனைத்து ஊராட்சிகளிலும் சாலை, குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்