மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.

Update: 2022-08-11 20:31 GMT


75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் பாது காப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.

பாதுகாப்பு பணி

மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழக போலீசார் இணைந்து இந்த 5 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை விமான நிலையத்தின் உள்பகுதிகளில் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் துப்பாக்கியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். விமான நிலையத்தின் வெளிப்புறப் பகுதிகளில் வாகனங்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் தீவிரமாக சோதனை செய்யப்படுகிறது. பயணிகள் கடும் சோதனைக்கு பின்னரே விமான நிலைய உள்வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாய் பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத் திற்குள் செல்ல வருகிற 23-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அனுமதி இல்லை

இதனால் பயணிகள் தவிர்த்து பார்வையாளர்கள் யாரும் உள்ளே அனுமதி அளிக்கப்பட மாட்டார்கள் என மத்திய தொழில் பாதுகாப்பு படை தெரிவித்து உள்ளது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிவிரைவு படையினரும் 24 மணி நேரமும் தயார் நிலையில் விமான நிலையத்தை சுற்றிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்