தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர் இடையே வாக்குவாதம்

தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2022-11-08 18:45 GMT

மானாமதுரை, 

மானாமதுரை யூனியன் கூட்டம் அதன் தலைவர் லதா அண்ணாதுரை தலைமையில் நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய உடனேயே அ.தி.மு.க. கவுன்சிலர் ருக்குமணி தன்னுடைய ஒன்றிய கவுன்சில் பகுதியில் 2 ஆண்டுகளாக அடிப்படை வசதியான தண்ணீர், ரோடு பிரச்சினையை கூட சரி செய்ய முடியாமல் உள்ளனர். இதை சரி செய்ய முடியாத நிலையில் யூனியன் நிர்வாகம் உள்ளது. நாங்கள் என்ன மிச்சர், டீ, சாப்பிட்டு விட்டு கையெழுத்து போடவா வந்துள்ளோம் என காரசாரமாக பேசினார்.

இதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அதிகாரி நிதி இல்லாமல் நாங்கள் இருக்கின்றோம் என்று கூறினார். மேலும், தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்