கஞ்சா விற்றவர் கைது

Update: 2022-12-24 16:37 GMT


சேவூர் போலீசார், தண்டுக்காரம்பாளையம் அருகே ராமியம்பாளையம் பகுதியில் நேற்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்துக்கு இடமாக அப்பகுதியில் நின்றிருந்தவரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் மேட்டுப்பாளையம், சிறுமுகை சாலை, எஸ்.எம். நகரைச் சேர்ந்த ஜலாபுதீன் மகன் அக்பர் அலி (40) என்பதும், அவர் விற்பனை செய்வதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 750 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்