அவினாசி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த சிவானந்தம் மகன் விக்னேஸ்வரன் (வயது 22). இவர் வீட்டின் அருகில் நிறுத்தியிருந்த ஆட்டோ மற்றும் லாரி ஆகியவற்றில் இருந்த பேட்டரிகளை மர்ம ஆசாமி திருடி சென்றதாக போலீஸ் நிலையத்தில்புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்த வந்தனர். விசாரனையில் அவினாசி ஆலாம்பாளையத்தை சேர்ந்த ராஜகோபால் (28) என்பவர் பேட்டரி திருடியது தெரியவந்தது. இதையடுத்து ராஜகோபாலை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.