பெண்ணை 'ஹாலோ பிளாக்' கல்லால் தாக்கி கொன்ற தொழிலாளி கைது

Update: 2022-09-18 16:50 GMT


பல்லடம் அருகே பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் பெண்ணை ஹாலோ பிளாக் கல்லால் தாக்கி ெகான்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். அவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பெண் கொலை

பல்லடம் மங்கலம் சாலையை சேர்ந்தவர் சுந்தர். இவருடைய மனைவி மகேஸ்வரி (வயது 40). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போனார். இதையடுத்து அவரை அவருடைய கணவர் தேடி வந்தார். இந்த நிலையில் பல்லடம் வெட்டுப்பட்டான் குட்டை பகுதியில் சேலம் மாவட்டம் வாழப்பாடி சின்னகவுண்டபுரம் ராமலிங்கபுரத்தை சேர்ந்த ராஜா (46) என்பவர் வாடகைக்கு குடியிருந்த ஒரு வீட்டில் மகேஸ்வரி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பது தெரியவந்தது. மகேஸ்வரி மார்பில் பலமாக தாக்கியதில் அவர் உயிரிழந்து இருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து பல்லடம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ராஜாவை தேடி வந்தனர். ஆனால் அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து ேபாலீசார் ராஜாவை கைது செய்தனர். கைதான ராஜா போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

நானும், மகே ஸ்வரியும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்தோம். அப்போதுஎங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி செல்போனில் பேசிக்கொள்வோம். இதனால் எங்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது. சம்பவத்தன்று நான் குடியிருந்த வீட்டிற்கு மகேஸ்வரி வந்து கொடுத்த பணத்தை கேட்டார். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில் அங்கு கிடந்த ஹாலோ பிளாக் கல்லை எடுத்து மகேஸ்வரியை தாக்கினேன். இதனால் சம்பவ இடத்தில் துடிதுடித்து இறந்தார். பின்னர் அவருடைய உடலை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு சேலம் சென்று விட்டேன். அங்கு வந்து போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு கைதான ராஜா வாக்குமூலம் கொடுத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் ராஜாவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான ராஜா மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்