பெருமாநல்லூரில் பனியன் நிறுவனம் நடத்தி வருபவர் சொக்கனூரை சேர்ந்த சிவராமகிருஷ்ணன் (வயது31). இந்த நிலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் பகுதியில் அலுவலகம் வைத்திருந்த திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை சேர்ந்த ஈஸ்வரன் (22) என்பவர், சிவராமகிருஷ்ணனிடம் விற்பனைக்காக ரூ.4¼ லட்சம் மதிப்பிலான பனியன் துணிகளை பெற்று கொண்டு அதற்குரிய பணத்தை தராமல் இருந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சிவராமகிருஷ்ணன் பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட பெருமாநல்லூர் போலீசார் ஈஸ்வரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.