நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த கார் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-19 15:36 GMT


திருப்பூரில் நிதி நிறுவன அதிபர் வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்த கார் வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கொள்ளை

திருப்பூர் ஓடக்காடு ராயபண்டாரம் வீதியை சேர்ந்தவர் சங்கமேஸ்வரன் (வயது 63). நிதி நிறுவன அதிபார். கடந்த 12-ந் தேதி சங்கமேஸ்வரன், அவருடைய மனைவி ராேஜஸ்வரி மற்றும் மகள் ஷிவானி ஆகியோரை 5 மர்ம ஆசாமிகள் 40 பவுன்நகை, ரூ.30லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த ெகாள்ளை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.

இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக திருப்பூர் வேலம்பாளையம் சொர்ணபுரி லே-அவுட் பகுதியைச் சேர்ந்த கார் வியாபாரி கோகுலகிருஷ்ணன் (34) என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கோகுல கிருஷ்ணன் அவ்வப்போது சங்கமேஸ்வரனிடம் பணம் வாங்கி கொடுத்து வந்தார். அதன்பின்னர் கோகுல கிருஷணன் தொழில் சரியாக அமையவில்லை. இதற்கிடையில் மோசடி வழக்கு ஒன்றில் சிக்கி கோகுலகிருஷ்ணன் சிறை சென்றார்.

கார் வியாபாரி கைது

அப்போது சிறையில் இருந்த தேனியை சேர்ந்த வள்ளிநாயகம் என்பவரின் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோகுலகிருஷ்ணனுக்கு பணத்தேவை ஏற்பட்டது. சங்கமேஷ்வரன் வீட்டில் அதிக பணம் இருப்பதை அறிந்து வீட்டில் கொள்ளையடிக்க வள்ளிநாயகத்திற்கு திட்டம் தீட்டி கொடுத்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து வள்ளிநாயகத்துடன் 4 பேர் சேர்ந்து சங்கமேஸ்வரன் வீட்டில் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்ட கோகுலகிருஷ்ணனை போலீசார் நேற்று கைது செய்து சிறையிலடைத்தனர். தலைமறைவாக உள்ள மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்