கோவில்பட்டிகோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவில்பட்டிகோட்டத்தில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-06-22 12:01 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை(வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது.

எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோவில்பட்டி உப மின் நிலையத்தின் நடராஜபுரம் தெரு, மூப்பன் பட்டி, வேலாயுதபுரம் மெயின் ரோடு, சங்கரலிங்கபுரம், இலுப்பையூரணி, தாமஸ் நகர், கூசாலிபட்டி, வண்ணாரப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கும், எட்டயபுரம் உப-மின் நிலையத்தின் பவர்கிரிட் எதிரிலுள்ள வளர்மதி பெட்ரோல் நிலையம் பகுதி, சின்ன மலைக்குன்று, வங்காரு பட்டி, உசிலங்குளம் ஆகிய பகுதிகளுக்கும், விஜயபுரி உப மின் நிலையத்தின் ஈராச்சி, விஜயபுரி, கசவன்குன்று, கொடுக்காம் பாறை ஆகிய பகுதிகளுக்கும், எம். துரைச்சாமிபுரம் உப மின் நிலையத்தின் சிவஞானபுரம், வாகை தாவூர், சீனி வெள்ளாளபுரம், ஆசூர், கோபாலபுரம் ஆகிய பகுதிகளுக்கும், பசுவந்தனை உப மின் நிலையத்தின் சி. குமரெட்டியாபுரம் பகுதிக்கும் மேற்கண்ட நாளில் மேற்கண்ட நேரங்களில் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்