தூத்துக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்

தூத்துக்குடி பகுதியில் வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-06-22 14:25 GMT

தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர்கள் பத்மா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடி ஊரக மின்சார வாரிய கோட்டம் புதுக்கோட்டை மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட புதூர், முடிவைதானேந்தல், வாகைகுளம், கே.புதூர் ஆகிய பகுதிகளிலும், வல்லநாடு மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட கலியாவூர், சின்ன கலியாவூர், அம்பேத்கர் நகர், காலாங்கரை, உழக்குடி ஆகிய பகுதிகளிலும், குளத்தூர் மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட வேப்பலோடை உப்பளம் பகுதிகளிலும், பழையகாயல் மின் வினியோக பிரிவுக்கு உட்பட்ட அகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் மின்சார வினியோகம் நிறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.Areas of power outage in Thoothukudi area on FridayAreas of power outage in Thoothukudi area on FridayAreas of power outage in Thoothukudi area on Friday

Tags:    

மேலும் செய்திகள்