அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் இலவசமாக வழங்கப்படுமா?

ஆறுகாட்டுத்துறையில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் இலவசமாக வழங்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

Update: 2022-12-26 18:45 GMT

வேதாரண்யம்:

ஆறுகாட்டுத்துறையில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் இலவசமாக வழங்கப்படுமா? என மீனவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அடுக்குமாடி குடியிருப்பு

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆறுகாட்டுத்துறையில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மீனவ கிராம மக்களுக்காக தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.68 கோடியில் 528 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகள் கட்டுவதற்கு கிராமம் சார்பாக 20 ஏக்கர் இடம் தானமாக வழங்கப்பட்டது.

இலவசமாக வழங்க வேண்டும்

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. 13 வளாகங்களாக பிரிக்கப்பட்டு 10 அடுக்குமாடிகளில் 420 வீடுகளின் கட்டுமான பணிகள் முடியும் தருவாயில் உள்ளது.

மீதம் உள்ள 3 வளாகங்களில் 108 வீடுகள் அஸ்திவாரம் போடப்பட்ட நிலையில் உள்ளது. வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 1,170 குடும்பத்தினர் குடியிருப்பதற்கு முறையான வீடுகள் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே அனைத்து வீடுகளையும் ஒட்டுமொத்தமாக கட்டிமுடித்து மீனவர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும் என மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்