வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி
மனிதநேய வார விழாவையொட்டி வில்லுப்பாட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
மனிதநேய வார விழாவையொட்டி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை சார்பில் வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் சாதியற்ற சமூகம் படைக்கவும், மதவேறுபாடுகளை கலைந்து மனிதநேயத்தோடு வாழ வலியுறுத்தியும், பிற உயிர்களை துன்புறுத்தாமல் மனித நேயத்தை வளர்த்து ஒற்றுமையாக வாழவும் பொதுமக்களுக்கு வில்லுப்பாட்டு மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.