ஆரணியில் ஒரே பகுதியில் 2 வீடுகளில் பீரோவை உடைத்து நகை கொள்ளை

ஆரணியில் ஒரே பகுதியில் 2 வீடுகளில் பீரோவை உடைத்து நகை கொள்ளை நடந்துள்ளது

Update: 2022-08-31 18:07 GMT

ஆரணி

ஆரணியில் ஒரே பகுதியில் 2 வீடுகளில் பீரோவை உடைத்து நகை கொள்ளை நடந்துள்ளது

ஆரணி சைதாப்பேட்டை அனந்தபுரம், எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வசிப்பவர் செந்தில்வேல். தனியார் நிதி நிறுவன மேலாளர். இவரது தாயாருக்கு சென்னையில் உள்ள மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையொட்டி இவரது குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றிருந்தனர். இவரது வீட்டுக்கு எதிரில் வசிப்பவர் சம்பத். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி சாந்தாவிற்கும் கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் சம்பத் குடும்பத்துடன் வீட்டை பூட்டிக்கொண்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை சென்றிருந்தார்.

இந்த நிலையில் இவர்களது வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இதனை பார்த்து செந்தில் வேல் மற்றும் சம்பத்துக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்த ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். செந்தில் வேல் வீட்டில் 3½ பவுன் தங்க நகைகளையும், சம்பத் என்பவர் வீட்டில் பீரோக்களை உடைத்து 14 பவுன் நகைகளும் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்