அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் நாளை திறப்பு
திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் நாளை திறப்பு
ரிஷிவந்தியம்
மணலூர்பேட்டை அருகே உள்ள திருவரங்கம் அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது. இதில் பகல் பத்து உற்சவத்தின் 8-வது நாளையொட்டி நேற்று ஶ்ரீ தேவி பூ தேவி சமேத அரங்கநாத பெருமாள் ஏகாந்த சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
மேலும் ஆங்கில புத்தாண்டையொட்டி இன்று(ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். பின்னர் காலை 11 மணியளவில் பகல் பத்து உற்சவத்தின் 9-வது நாள் நிகழ்ச்சியும், இரவு 7 மணி அளவில் மோகினி அவதாரத்தில் அரங்கநாதர் அருள்பாலிக்கிறார். தொடர்ந்து இரவு முழுவதும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. நாளை(திங்கட்கிழமை) அதிகாலை 5 மணி அளவில் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெறுகிறது.