அரக்கோணம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகரமன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் லதா வரவேற்றார்.
1-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் குமார், 3-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் சரவணன் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் ஜெர்ரி, நரசிம்மன், 15-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் நித்யா ஷியாம் ஆகியோர் தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினர். கூட்டத்தில் நகராட்சி வழக்கறிஞராக என்.குமரகுருவை தற்காலிகமாக நியமனம் செய்திட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.