அரக்கோணம்- பெங்களூரு பயணிகள் ரெயில் விரைவில் இயக்கப்படும்

கொரோனா காரணமாக 2 வருடங்களாக நிறுத்தப்பட்ட அரக்கோணம்- பெங்களூரு பயணிகள் ரெயில் விரைவில் இயக்கப்படும் என்று கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்தார்.

Update: 2022-06-05 14:15 GMT

ஜோலார்பேட்டை

கொரோனா காரணமாக 2 வருடங்களாக நிறுத்தப்பட்ட அரக்கோணம்- பெங்களூரு பயணிகள் ரெயில் விரைவில் இயக்கப்படும் என்று கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்தார்.

கோட்ட மேலாளர் ஆய்வு

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் சென்னை ரெயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் சென்னையிலிருந்து தனி ரெயில் மூலம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்துக்கு வந்தார். அவரை ஜோலார்பேட்டை ரெயில் நிலைய மேலாளர் கணேசன் வரவேற்றார். மஸ்தூர் யூனியன் ஜோலார்பேட்டை கிளை செயலாளர் ஜெகன் மாலை அணிவித்தார்.

பின்னர் ரெயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்கள் மற்றும் அலுவலகங்கள், ரெயில்வே மருத்துவமனை, ரெயில்வே டிரைவர் ரன்னிங் அறை, கூட்ஸ் ஷெட், ரெயில்வே குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, குடிநீர், கழிப்பிட வசதி, ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு போதுமான இடவசதிகள் குறித்து துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஓடும் ரன்னிங் அறைகளை பார்வையிட்டு தங்குவதற்கான வசதிகள் குறித்தும், உணவுகள் தரமானதாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டார். அதன் பிறகு மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

விரைவில் இயக்கப்படும்

கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்கள் மீண்டும் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள அரக்கோணம்- பெங்களூரு பயணிகள் ரெயில் விரைவில் இயக்கப்படும். மேலும் ரெயில் நிலையத்தில் உள்ள 5 பிளாட்பாரங்களிலும் ரெயில்களில் எந்த கோச் எங்கு உள்ளது என்பதை ரெயில் பயணிகள் கண்டறியும் வகையில் டிஸ்பிளே வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் ெரயில் பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்யப்பட்ட பெட்டியை அறிந்து கொள்வதற்கு வசதியாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது ெரயில்வே கோட்ட உதவி மேலாளர்கள் ஆனந்த், சச்சின் புனிதா, சுப்பிரமணியன் உள்ளிட்ட ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே மற்றும் பாதுகாப்பு படை போலீசார் பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்