அரகண்டநல்லூரை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும்

அரகண்டநல்லூரை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Update: 2023-02-21 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரகண்டநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூடத்தில் தலைவர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் கஜிதாபீவி முன்னிலை வகித்தாா். செயல் அலுவலர் அருள்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் எனவும், தங்கள் பகுதிக்கு தேவையான வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் பேசினார்கள். நிறைவாக பேசிய பேரூராட்சி மன்ற தலைவர், நிதி ஆதாரத்தை கணக்கில் கொண்டு கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும். தற்போது அரகண்டநல்லூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.13½ லட்சம் செலவில் உரத்திடலில் விண்டோ பிளாட்பார்ம் அமைத்தல் பணி மேற்கொள்ள மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. பேரூராட்சியில் தேவைப்படும் கூடுதல் வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் பொதுமக்களின் பங்களிப்பாக 33 சதவீத நிதி பங்களிப்பு தரும் பட்சத்தில் கூடுதல் திட்டங்களை செயல்படுத்த முடியும் என்றார்.

கூட்டத்தில் சமுதாய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் அரகண்டநல்லூரை சுற்றுலாத்தலமாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் சுந்தரமூர்த்தி, குமார், அனுராதா, சரவணன், மாணிக்கவாசகம், சுகி, ஜெரினாபேகம், ரமேஷ், குமார், வேம்பு, அனிதா மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தலைமை எழுத்தர் சுதாகர் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்