ராகவேந்திரா் சுவாமி பிருந்தாவனத்தில் ஆராதனை விழா

ராகவேந்திரா் சுவாமி பிருந்தாவனத்தில் ஆராதனை விழா நடைபெற்றது.

Update: 2022-08-16 17:28 GMT

அரிமளம்:

அரிமளம் ஒன்றியம், சிவபுரம் கிராமத்தில் ராகவேந்திரா் சுவாமிகளின் மிருத்திகா பிருந்தாவனத்தில் 351-வது ஆராதனை விழா நடைபெற்றது. 4 நாட்கள் நடைபெற்ற இந்த ஆராதனை விழாவில் மகாயாக பூஜை, கிராம தேவதை சிறப்பு பூஜை, கோ பூஜை, ஆராதனை விழா கொடியேற்றுதல் ஆகியவை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை குரு ஸ்தோத்திர பாராயணம், பிரகலாத ராஜ ஊஞ்சல் சேவை, மங்கல ஆரத்தி ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாலையிடு சடையப்பச்சி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் புறப்பட்டு ராகவேந்திரா பிருந்தாவனம் சென்றடைந்தது. உத்திர ஆராதனை விழா, அபிஷேகம், மங்கல ஆரத்தி, அன்னதானம் வழங்கப்பட்டது. பிரகலாத ராஜா ஊஞ்சல் சேவை உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்